search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய கடன்"

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்த அசாம் மற்றும் குஜராத் முதல்-மந்திரிகளை தூக்கத்தில் இருந்து எழுப்பி விட்டோம், அதுபோல், பிரதமரையும் தூக்கத்தில் இருந்து எழ வைப்போம் என்று ராகுல் காந்தி கூறினார். #RahulGandhi #Modi
    புதுடெல்லி:

    மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் சமீபத்தில் பதவி ஏற்றன. அடுத்த சில மணி நேரங்களில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அம்மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அறிவித்தனர். அதுபோல், நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்கவிட மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இதற்கிடையே, பா.ஜனதா ஆளும் குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் அறிவிப்புகளை வெளியிட்டனர்.



    ரூ.600 கோடி விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை அசாம் மாநில முதல்-மந்திரி வெளியிட்டார். கிராமப்புற மக்களின் ரூ.625 கோடி மின்கட்டண பாக்கியை தள்ளுபடி செய்து குஜராத் முதல்-மந்திரி அறிவித்தார்.

    பா.ஜனதா அரசுகளின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    குஜராத், அசாம் மாநிலங்களின் முதல்-மந்திரிகளை காங்கிரஸ் கட்சி, தூக்கத்தில் இருந்து எழ வைத்து விட்டது. ஆனால், பிரதமர் இன்னும் ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருக்கிறார். அவரையும் எழ வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #Modi 
    சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். #ChhattisgarhCM

    ராய்ப்பூர்:

    பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

    ராஜஸ்தான் முதல்- மந்திரியாக அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் ஆகியோர் நேற்று அந்தந்த மாநில தலைநகர்களில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இந்த மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல் மந்திரிகள் பதவி ஏற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

    அதன்படி மத்திய பிரதேசத்தில் நேற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் முதன் முதலில் விவசாய கடன்களை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார். அதன் படி கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் கடந்த மார்ச் மாதம் வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பூபேஷ் பாகெல்லும் பதவி ஏற்றதும் குறுகிய கால விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

    மேலும் நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1700-ல் இருந்து ரூ.2500ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

    “சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னணி தலைவரான நந்தகுமார் படேல் உள்பட 29 காங்கிரஸ் நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டனர். இது போன்ற சம்பவம் வரலாற்றில் நடந்தது இல்லை. இதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும்” என்றும் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் உறுதி அளித்தார். #ChhattisgarhCM

    விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumarasamy
    முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர்களுக்கு குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகள் குறித்த விவரம் வருமாறு:-

    விவசாய கடன் தள்ளுபடி குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அதனால் விவசாயிகள் இடையே எழுந்துள்ள சந்தேகங்களை போக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும்.

    33 வங்கிகளிடம் இருந்து சுமார் 20 லட்சம் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடிக்கு என்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் பணியை சேடம் மற்றும் தொட்டபள்ளாபுரா ஆகிய தாலுகாக்களில் சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறோம். இதுவரை 4,000 விவசாயிகள் தாமாக முன்வந்து தங்களின் விவசாய கடன் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளனர்.

    தெருவோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க தாலுகாக்களுக்கு தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோசாலை திறக்க வேண்டிய அவசியம் எழுந்தால், அதற்கு சரியான இடத்தை மாவட்ட கலெக்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். பசுமை தீவனத்தை வளர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு அதற்கான விதைகளை வழங்க கால்நடைத்துறைக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வறட்சி பாதித்த பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோக பணிகளுக்கு 30 மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை குறைந்துவிட்டது. இதனால் வெங்காயத்திற்கு ஆதரவு விலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஆவதாக புகார்கள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டத்தின் மூலம் கூடுதலாக ரூ.450 கோடி ஒதுக்கி இருக்கறோம். இதை பயன்படுத்தி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 மாவட்டங்களில் ெதாழிற்பேட்டைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #kumarasamy
    10 நாளில் விவசாய கடன்களை ரத்துசெய்வதாக ராகுல் காந்தி கூறுவது மலிவான விளம்பரம் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #RahulGandhi #PollPromise #FarmerLoan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். அதற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதில் அளித்தார்.

    அவர் கூறியதாவது:- ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க மாட்டோம் என்ற தைரியத்தில் இப்படிப்பட்ட வாக்குறுதிகளை ராகுல் கூறுகிறார். பகுதி அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால்கூட வளர்ச்சி பணிகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படும். ஒரு விஷயம் குறித்த ஞானம் இல்லாதவர்கள்தான், இதுபோன்ற மலிவான விளம்பரம் தேடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ArunJaitley #RahulGandhi #PollPromise #FarmerLoan
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடனால் பாதிக்கப்பட்ட 1398 ஏழை விவசாயிகளின் 4.05 கோடி ரூபாய் வங்கி கடனை நடிகர் அமிதாப் பச்சன் அடைத்துள்ளார். #AmitabhBachchan
    மும்பை:

    நாட்டின் பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிகமான மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மை பொய்த்துப் போனதுடன், வங்கிக்கடனும் சேர்ந்து தலைமேல் பாரமாகி விட்ட மனவேதனையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

    சில மாநிலங்கள் ஓரளவுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருந்தாலும், பரவலாக வங்கிக் கடன்களால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 1398 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ளார்.

    இதற்கு முன்னர் மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைத்துள்ள அமிதாப் பச்சன், ‘என்னால் இயன்ற இந்த சிறிய உதவி இதர மாநிலங்களிலும் தொடரும்’ என தனது வலைப்பூவில் (பிளாக்) சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதனைதொடர்ந்து, தற்போது 1398 விவசாயிகளின் வங்கி கடன் தொகையான ரூ.4.05 கோடி ரூபாய் தொகையை அவர் அடைத்துள்ளார்.



    இவர்களில் 70 விவசாயிகளை தனது செலவில் மும்பைக்கு வரவழைத்து கடனை அடைத்ததற்கான வங்கி ரசீதுகளை அமிதாப் பச்சன் தந்தனுப்பியுள்ளார். #AmitabhBachchan #AmitabhBachchanfarmersloan #farmersloan
    விவசாய தொழில் பாதிக்கப்படும் போது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வகையிலும், புதிய கொள்கை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நம் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு கடந்த 2017-18ஆம் நிதி ஆண்டில் வாராக்கடன் ரூ.9.61 லட்சம் கோடி என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

    ஒவ்வொரு நிதி ஆண்டிலும் பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக்கடன் இருப்பதாக அறிவிக்கும் அரசு, அந்த கடனை வசூல் செய்ய முறையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பது தான் உண்மை நிலை.

    அரசு விவசாயிகளின் கடனை மட்டும் வசூல் செய்ய கெடுபிடி நடவடிக்கையில் ஈடுபட்டது. ஆனால் பெரு முதலாளிகள், தொழில் அதிபர்கள் போன்ற வசதி படைத்தவர்கள் வாங்கிய கடனை வசூல் செய்ய கெடுபிடி நடவடிக்கைகளை ஆரம்பக்கட்டத்திலேயே எடுக்க அரசு தவறிவிட்டது.

    பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகள் கடன் கொடுப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கடைப்பிடித்தனரா என்பதெல்லாம் கேள்விக்குறியே.

    எனவே பொதுத்துறை வங்கிகளுக்கு வாராக்கடனாக உள்ள தொகையை வசூல் செய்ய வேண்டும். அதே சமயம் விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

    மத்திய பா.ஜ.க. அரசு- பொதுத்துறை வங்கிகளுக்கு முதலீடுகளை அதிகரிக்கும் விதமான அம்சங்கள் இருக்கும் வகையிலும், கடன் கொடுப்பதிலும், வசூல் செய்வதிலும், நியாயமாக கடன் வாங்க வருவோருக்கும், மாணவர்களுக்கும், சிறு குறு தொழில் முனைவோருக்கும் கடன் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். விவசாய தொழில் பாதிக்கப்படும் போது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வகையிலும்- புதிய கொள்கை வகுத்து, செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    விவசாய கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பீதியடைய தேவை இல்லை என்று குமாரசாமி கூறியுள்ளார். #Kumarasamy
    பெங்களூரு :

    டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடியின் பயனை பெற விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்திருப்பதாக தவறான தகவல் பரவி வருகிறது. இது வெறும் வதந்தி யாரும் நம்ப வேண்டாம். விண்ணப்பிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. அதனால் விவசாயிகள் பீதியடைய தேவை இல்லை.

    கடனில் சிக்கி தவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற தனியாரிடம் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. அதற்கு மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளோம். அதனால் விவசாயிகள் யாரும் தற்கொலை முடிவை எடுக்க வேண்டாம்.

    விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதில் வெற்றி பெறுவோம். கடன் தள்ளுபடி விஷயத்தில் வெளியாகும் தவறான தகவல்களை விவசாயிகள் நம்பக் கூடாது. விவசாயிகள் சரியான தகவல்களை வழங்கினால், அதன் அடிப்படையில் கடன் தொகையை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் இடைத்தரகர்கள் பயன் அடைவது தடுக்கப்படும்.

    தனியார் கடன் தள்ளுபடிக்கான சட்ட மசோதாவில் 2 சந்தேகங்களை மத்திய அரசு கேட்டது. அவற்றுக்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். இந்த சட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கும். கடன் தள்ளுபடியின் பயனை விவசாயிகள் முழுமையாக பெற வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    இந்த சந்திப்பின்போது, தேவேகவுடா, பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா ஆகியோர் உடன் இருந்தனர். #Kumarasamy
    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வர்ணகுமார் தலைமை தாங்கினார்.

    மாநில செயலாளர் தனபால் மற்றும் மாவட்ட தலைவர் பரசுராமன் உள்பட 50-க் கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, காய்ந்து கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். தென்பெண்ணை-பாலாறு நதிகளை இணைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு விவசாயிகள் சென்றனர். கலெக்டர் ராமனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

    தனியார்களிடம் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய சட்டதிருத்தம் கொண்டுவரப்படும். இதன் மூலம் தனியார்களிடம் விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தேவை இல்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா தெரிவித்தார். #Ministerparameswara #Agriculturalloan
    பெங்களூரு :

    துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    “கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று நாளையுடன் (அதாவது இன்று) 100 நாட்கள் ஆகிறது. இந்த நாட்களில் நாங்கள் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர், முன்பு சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும் என்று கூறினார். அதன்படி அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது. இந்த அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. 5 ஆண்டு காலத்தை இந்த கூட்டணி அரசு பூர்த்தி செய்யும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பா.ஜனதா மற்றும் சிலர், இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சி பலிக்காது.

    கூட்டணி கட்கள் இடையே பிரச்சினை வந்தால், அதை இரு கட்சியினரும் பேசி தீர்த்துக்கொள்வோம். நாங்கள் மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகிறோம். கடந்த 100 நாட்களில் மிக முக்கியமாக, கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யும் முடிவை எடுத்துள்ளோம். தேசிய வங்கிகளில் உள்ள ரூ.31 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது ஒரு வரலாற்று முடிவு.



    தேசிய வங்கிகளும் இந்த கடன் தள்ளுபடிக்கு சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த ரூ.31 ஆயிரம் கோடி தள்ளுபடி தொகை வங்கிகளுக்கு 4 ஆண்டுகளில் வட்டியுடன் திரும்ப செலுத்தப்படும். விவசாயிகள் தனியாரிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தேவை இல்லை. அதற்காக புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநில அரசு மிக தைரியமாக செயல்பட்டு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறது.

    இதனால் தனியார் கடனை விவசாயிகள் திரும்ப செலுத்த தேவை இல்லை. கடன் கொடுத்தவர்கள் யாரும் அதை கேட்டு வற்புறுத்த முடியாது. அவ்வாறு வற்புறுத்தினால், அத்தகையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் கர்நாடகத்தில் முன்பு 1976-ம் ஆண்டு மற்றும் 1986-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு தனியார் கடனை திரும்ப செலுத்துவது தடை செய்யப்பட்டது.

    13 மாவட்டங்களில் மழை குறைவாக பெய்துள்ளதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் கனமழையால் குடகு மாவட்டத்தில் வெள்ளம் உண்டாகி வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாவட்ட கலெக்டரின் வங்கி கணக்கில் ரூ.30 கோடி நிதி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    அவசர தேவைகளுக்கு மாவட்ட கலெக்டரே முடிவு எடுத்து அதற்கான நிதியை செலவு செய்யலாம் என்றும், மாநில அரசிடம் முன் அனுமதி பெற தேவை இல்லை என்றும் கூறி இருக்கிறோம். கேரளாவில் ஆய்வு செய்த பிரதமர் மோடி குடகுக்கு வரவில்லை. இதுவரை கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிதி உதவியை வழங்கவில்லை. மீட்பு பணிகளுக்கு மட்டும் ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை மத்திய அரசு அனுப்பியது.

    ராணுவ மந்திரி வந்து நேரில் ஆய்வு செய்தார். ஆனால் மத்திய அரசின் உதவியை அவர் அறிவிக்கவில்லை. மழை சேதங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்குமாறு கேட்டுள்ளோம். ஆனால் இதுபற்றி மத்திய அரசு இதுவரை எந்த பதிலையும் கூறவில்லை. முதல்-மந்திரி குமாரசாமி, நான் மற்றும் மந்திரிகள் நாளை (இன்று) டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரியை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். அப்போது மழை பாதிப்புக்கு நிதி உதவி வழங்குமாறு கோருவோம்.”

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Ministerparameswara #Agriculturalloan
    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. #KarnatakaBudget
    பெங்களூரு:

    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 488 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.106 கோடி உபரி பட்ஜெட் ஆகும்.



    பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இந்த சபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். அதுபோல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    * 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும்

    * அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.

    * 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள 28 ஆயிரத்து 847 பள்ளிகள் அருகாமையில் உள்ள 8 ஆயிரத்து 530 பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

    * கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    * கடனை சரியாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு மொத்த கடனில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

    * சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியை பெற்று மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெங்களூரு 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக 95 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்.

    * பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி தலா 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மின்சார பயன்பாடு மீதான வரி 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    இவ்வாறு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.  #KarnatakaBudget #Tamilnews
    ×